000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a திரிபுராந்தகர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a முப்புரத்தை சிரிப்பாலே எரித்த திரிபுராந்தகர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களின் தங்கம், வெள்ளி, இரும்பாலான மூன்று கோட்டைகளை அழிப்பதற்கு சிவனார் பூண்ட திருக்கோலமே திரிபுராந்தகர். 64 சிவ வடிவங்களுள் ஒன்றான திரிபுராந்தகர் வடிவம் இறைவனின் எட்டு வீரச் செயல்களுள் ஒன்றான முப்புரமெரித்த லீலையை சொல்லும் கோலமாகும். திருவாலீஸ்வரத்தில் உள்ள திரிபுராந்தகர் ஊர்த்துவஜானுவில் உயர்த்தி நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் வைத்து, இடது காலை நிலத்தில் ஊன்றியுள்ளார். ஜடாமகுடன் அணிந்துள்ள இறைவர் தன் நான்கு திருக்கரங்களில் பின்னிரு கைகளில் மானும், மழுவும் கொண்டுள்ளார். முன்னிரு கைகள் வில்லில் அம்பைப் பூட்டி எய்தும் நிலையில் கொண்டுள்ளன. இடையில் அரையாடை உடுத்தி திரிபுராந்தகர் முகப்புடன் கூடிய அரைப்பட்டிகை அணிந்துள்ளார். மார்பில் முப்புரி நூல் செல்கிறது. காதுகளில் மகர, பத்ர குண்டலங்கள் விளங்குகின்றன. கைகளில் தோள்வளை, முன்வளைகள், கால்களில் சிலம்பு கழுத்தில் சரப்பளி ஆகியன அணிகளாக உள்ளன. வெருட்டும் விழிகளுடன் திரிபங்க நிலையில் (உடலை மூன்று கோணங்களில் வைத்தல்) நிற்கிறார். |
653 | : | _ _ |a திரிபுராந்தகர், முப்புரமெரித்தவர், முப்புராரி, திரிபுராரி, புரரிபு, மூவெயில் எறிந்தோன், திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
914 | : | _ _ |a 8.73252599 |
915 | : | _ _ |a 77.44489074 |
995 | : | _ _ |a TVA_SCL_000248 |
barcode | : | TVA_SCL_000248 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |